வெங்காய சாம்பார்
Share
வெங்காய சாம்பார்
வெங்காய சாம்பார் செய்வது எப்படி
தேவையான பொருட்கள்:
*சாம்பார் வெங்காயம் - 15 அல்லது 20
*தக்காளி நடுத்தர அளவு - 1
*பச்சை மிளகாய் - 2
*துவரம் பருப்பு - 1 கப்
*புளி - ஒரு சிறு எலுமிச்சம்பழ அளவு
*சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
*மஞ்சள்த்தூள் - 1/4 டீஸ்பூன்
*உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
தாளிக்க:
*எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
*கறிவேப்பிலை - சிறிது
*கொத்தமல்லித்தழை - சிறிது
செய்முறை:
Method
துவரம்பருப்பை நன்றாகக் கழுவி, அத்துடன் 2 கப் தண்ணீர், சிறிது மஞ்சள்த்தூள் சேர்த்து, குக்கரில் வேக வைக்கவும்.
புளியை ஊறவைத்து, கரைத்து, வடிகட்டிக் கொள்ளவும். 2 கப் அளவிற்கு புளித்தண்ணீர் இருக்கவேண்டும்.
வெங்காயத்தை தோலுரித்து, முழுதாக வைத்துக் கொள்ளவும். தக்காளியை நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில், இரண்டாக நறுக்கி வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு (நல்லெண்ணை உபயோகித்தால், வாசனையாக இருக்கும்) சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், பெருங்காயத்தூள், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியவுடன், தக்காளித்துண்டுகளைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பின்னர் அதில், புளித்தண்ணீர், சாம்பார் பொடி, மஞ்சள்த்தூள், உப்புச் சேர்த்து, மூடி வைத்து, மிதமான தீயில் கொதிக்க விடவும்.
குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும், வெந்தப் பருப்பை மசித்து சேர்க்கவும். நன்றாகக் கிளறி மீண்டும் கொதிக்க விடவும். சாம்பார் கொதித்து, சற்று கெட்டியானதும், கீழே இறக்கி, கொத்துமல்லித் தழையைத் தூவவும்.
சுவைமிக்க வெங்காய சாம்பார் தயார்.
Hits: 2371, Rating : ( 5 ) by 1 User(s).